மாட்டை காப்பாற்ற சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி - சோகத்தில் கும்பகோணம்

train accident kumbakonam
By Petchi Avudaiappan Aug 27, 2021 04:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விபத்து
Report

 தஞ்சாவூர் அருகே மாட்டை காப்பாற்ற சென்ற சிறுவன் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் மிசின் தெருவைச் சேர்ந்தவர் அருமதுரை என்பவரது மகன் திலிப்குமார் அப்பகுதியில் உள்ள றிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

கொரோனா காரணமாக பள்ளி மூடப்பட்டிருப்பதால் தனது வீட்டில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். அந்த வகையில் தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாடு ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளது.

அந்த நேரம் ரயில் பாதையில் மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி ஜனசதாப்தி விரைவு ரயில் மாடு அடிபட்டு இறந்து விடும் என பதறிய சிறுவன் மாட்டை அங்கிருந்த விரட்ட ரயில் தண்டவாளத்துக்கு ஓடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி திலிப் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.