'எங்க ஸ்கூலுக்கு போற சாலையை சீரமைத்து கொடுங்க' - மாவட்ட ஆட்சியரிடம் 6வயது சிறுவன் கோரிக்கை!
கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிராம சபைக் கூட்டம்
77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பங்கேற்றார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டும், புகார் மனுக்களையும் மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
சிறுவன் கோரிக்கை
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற விஜய் என்ற 6 வயது சிறுவன் 'தாம் வழக்கமாக பள்ளிக்கு செல்லும் பாபு கோவிந்தராஜன் நகர், வானதி நகர் சாலைகள் சேதமடைந்துள்ளது. அங்கு புதிய சாலை அமைத்து கொடுங்கள்' என்று மழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமது வீட்டிற்கு வருமாறும் ஆட்சியருக்கு சிறுவன் அழைப்பு விடுத்துள்ளார்.