காவு வாங்கும் ஆழ்துளை கிணறுகள் - 4 நாட்களுக்கு பின் சிறுவனின் உடல் சடலமாக மீட்பு
400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனின் உடல் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்
மத்தியபிரதேச மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் தன்மய். 5 வயதான இச்சிறுவன் கடந்த 6ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான்.

பெற்றோர் தனது மகனை தேடிய போது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சிறுவனின் உடல் சடலமாக மீட்பு
400 அடி ஆழ்துளை கிணற்றில் 40 அடியில் ஆழத்தில் இருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து 5 நாட்களாக மீட்புபணி நடைபெற்று வந்த நிலையில் நேற்று சிறுவன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
சிறுவன் உயிருடன் மீட்கப்படுவான் என்று கிராம மக்கள் எதிர்பார்த்த நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவையே உலுக்கிய நிலையில் மத்திய பிரதேசத்தில் 5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது என்பது தொடர்கதையாகி வருகிறது.