சிறுவனிடம் சிக்கிய சிறுத்தை - மண்டபத்தில் பூட்டிவிட்டு ஓட்டம் - வைரலாகும் Video!
சிறுத்தை ஒன்றை சாதுர்யமாக மண்டபத்தில் வைத்து பூட்டிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சிக்கிய சிறுத்தை
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நபர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரின் 12 வயது மகன் இன்று அந்த மண்டபத்தின் வரவேற்பு அறையில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சிறுத்தை ஒன்று அந்த சிறுவன் அமர்ந்திருப்பதை பார்க்காமல் அறைக்குள் நுழைந்தது. தன்னை சிறுத்தை கடந்து செல்வதை கண்ட அந்த சிறுவன் எந்த பதற்றமும் இல்லாமல் மெதுவாக எழுந்து சென்று கதவை சாத்திவிட்டு ஓடிவிட்டார்.
சிறுவனுக்கு பாராட்டு
இதனால் சிறுத்தை மண்டபத்திற்குள் சிக்கிக் கொண்டது. இதுகுறித்து சிறுவன் தனது தந்தையிடம் தெரிவிக்க, அவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
உடனே அங்கு வந்த வனத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, அந்த சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.