என்எல்சியில் மண்ணுக்குள் புதைந்த சிறுவன் - கடைசியில் திக் திக்

Viral Video Cuddalore
By Thahir Aug 24, 2022 05:28 AM GMT
Report

விருத்தாசலம் அடுத்த நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின், சுரங்கத்தில் வெளியேற்றப்பட்ட மண்ணில், கழுத்தளவிற்கு, சிக்கிக்கொண்ட சிறுவனை மீட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண் புதைக்குழியில் சிக்கிய சிறுவன் 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நெய்வேலி என்எல்சி இந்தியா நிறவனத்தின், இரண்டாம் சுரங்கம் அருகில் ஊமங்கலம் கிராமம் அமைந்துள்ளது.

இக்கிராமத்தின் அருகே சுரங்கத்திலிருந்து, நிலக்கரி வெட்டி எடுத்துவிட்டு, அம்மண்ணை மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5-வயது சிறுவன் ஒருவன், மலைபோல் கொட்டப்பட்டுள்ள மணல் மேட்டில் ஈரப்பதம் இருப்பதை உணராத, அச்சிறுவன் நடந்து சென்ற போது,  திடீரென புதைக்குழியில் மாட்டி கொண்டது போல், சிறுவன் நெஞ்சளவிற்கு மண்ணிற்குள் சிக்கி கொண்டுள்ளான்.

என்எல்சியில் மண்ணுக்குள் புதைந்த சிறுவன் - கடைசியில் திக் திக் | A Boy Buried In The Soil

இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும், அந்த பகுதியில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாத நிலையில், சிறுவன் கத்தி கதறி கூச்சலிட்டு சோர்வடைந்து போகியுள்ளான்.

சிறுவனை மீட்ட இளைஞர்கள் 

பிறகு ஆபத்தில் சிக்கிய சிறுவன் இருந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் வேலை பார்த்து விட்டு, வீடு திரும்பிய நெய்வேலி அடுத்த ரோமாபுரி கிராமத்தைச் சேர்ந்த, இளைஞர்கள் புதைகுழிக்குள் சிக்கிய அச்சிறுவனை கண்டு சிறிது நேர போராட்டத்தின் பின்,  பத்திரமாக மீட்டு அவனுக்கு முதல் உதவி செய்து, அவனது வீடு எங்கு என்று விசாரித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

என்எல்சியில் மண்ணுக்குள் புதைந்த சிறுவன் - கடைசியில் திக் திக் | A Boy Buried In The Soil

இச்சம்பவம் குறித்து இளைஞர்கள் சிறுவனை மீட்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்தில், சிறுவனை மீட்ட ரோமாபுரி கிராம இளைஞர்கள் என்றும், அவர்களது பெயர் பிரவின் குமார், எட்வின் ராஜ், மிரோலின், ராகுல் உள்ளிட்டோரை சமூக வலைதளத்தில் பாராட்டு வருகின்றனர்.