திருமண போட்டோ ஷூட்டில் திடீரென வெடித்த குண்டு.., மணப்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
திருமண போட்டோ ஷூட்டில் திடீரென குண்டு வெடித்ததால் மணப்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திடீரென வெடித்த குண்டு
கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் விக்கி மற்றும் பியா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதற்காக சொந்த ஊரான பெங்களூருவுக்கு வந்திருந்தனர்.
அப்போது, திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட் எடுப்பதற்காக பெங்களூருவில் உள்ள திறந்தவெளி தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக, வண்ண புகை குண்டுகள் வெடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டன.
போட்டோ ஷூட்டில் மணப்பெண்ணை மணமகன் தூக்கி கொண்டாடினர். அந்த நேரத்தில் வண்ணப்புகை குண்டுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதறின.
அப்போது, எதிர்பாராதவிதமாக புகைகுண்டு ஒன்று மணப்பெண்ணின் மீது விழுந்து வெடித்ததால் அவர் வலியில் கதறினார். பின்னர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில், மணப்பெண்ணின் முகுது மற்றும் இடைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது தலைமுடியும் தீயில் கருகி இருந்தது.
தற்போது, இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |