விளையாடும் போது பாம்பை மென்று சாப்பிட்ட 3 வயது சிறுவன் - பெற்றோர் அதிர்ச்சி..!

Uttar Pradesh Snake
By Thahir Jun 06, 2023 12:40 PM GMT
Report

விளையாடிக் கொண்டிருந்த போது 3 வயது சிறுவன் பாம்பை பிடித்து மென்று சாப்பிட்ட சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பாம்பை பிடித்து மென்று சாப்பிட்ட

உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமததைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் இவரது மகன் ஆயுஷ் வயது 3. இச்சிறுவன் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது பாம்பை வாயில் வைத்து மென்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். பின்னர் அங்கு ஓடி வந்த பெற்றோர் இறந்த பாம்பை பையில் போட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

A 3-year-old boy who chewed a snake

24 மணி நேர கண்காணிப்புக்கு பிறகு சிறுவன் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது சிறுவன் நலமாக இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.