70 வயது முதியவரை திருமணம் செய்த 20 வயது பெண் - கொதிப்பில் 90ஸ் கிட்ஸ்

Marriage
By Thahir Oct 22, 2022 12:24 PM GMT
Report

தனது தங்கைகளுக்காக திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த முதியவருக்கு 70 வயதில் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

ஆதரவின்றி தவித்த முதியவர்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் அருகில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் விவசாயியாக இருந்து வருகிறார்.

இவர் ஏழ்மையான குடும்பத்தில் மூத்தவராக பிறந்த நிலையில், தனது பிற சகோதரிகளுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

தனது இளம்வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடவே, 70 வயதாகி ஆதரவின்றி தவித்து வந்துள்ளார்.

இதனால் வயோதிக காலத்தில் அவரை கவனிக்க ஆள் வேண்டும் என உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

20 வயது பெண்ணுடன் திருமணம் 

அவர் அப்பகுதியில் நேர்மையான, நன்னடத்தை கொண்டவராக விளங்கி வந்தமையால், இந்த தகவலை கேட்டறிந்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி தனது 20 வயது மகளை அவருக்கு மணமுடித்து வைக்க திட்டமிட்டார்.

A 20-year-old woman married to a 70-year-old man

இந்த விசயத்திற்கு 20 வயது பெண்ணும் ஒப்புக்கொள்ளவே, இருதரப்பிலும் மும்மரமாக திருமண ஏற்பாடுகளை கவனித்துள்ளனர். நேற்று அங்குள்ள கோவிலில் வைத்து இருவரின் திருமணமும் வெகு விமர்சையாக நடைபெற்றது.