Sunday, Jul 13, 2025

99 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை - ரகசிய கேமராவில் பதிவான திடுக்கிடும் காட்சி

Sexual abuse shocking news Traumatic event 99 year old grandmother மூதாட்டி பாலியல் வன்கொடுமை
By Nandhini 3 years ago
Nandhini

Nandhini

in உலகம்
Report

இங்கிலாந்தில் 99 வயது அந்த மூதாட்டி ஒருவர் டிமென்ஷியா என்கிற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ஞாபகமறதி அதிகமாக இருந்துள்ளது.

மூதாட்டியை அவரது உறவினர்கள் பராமரிப்பு இல்லத்தில் விட்டுள்ளனர். இந்நிலையில், மூதாட்டி பிளாக்பூல் என்ற பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

அந்த இல்லத்தில் பிலிப் கேரி மூதாட்டிக்கு பராமரிப்பாளராக இருந்து வந்துள்ளார். அதனால், நம்பிக்கையின் பேரில் மூதாட்டியை அவர் பராமரிப்பில் குடும்பத்தினர் விட்டுள்ளனர்.

பிலிப் கேரி தினமும் அந்த மூதாட்டியை அடிக்கடி சென்று பார்த்து கட்டிப்பிடித்து நலம் விசாரித்து முத்தமிடுவது வழக்கமாக வைத்து வந்துள்ளார். ஆனால், அந்த பாட்டி பிலிப் கேரி அப்படி செய்யும்போது கட்டிப்பிடிக்க விடவில்லை. முத்தமிட விடவில்லை. இதெல்லாம் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. திடீரென்று மூதாட்டியிடம் சில மாற்றத்தை உறவினர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உறவினர்களை சந்திக்க விருப்பம் இல்லாமல் இருந்து வந்துள்ளார் மூதாட்டி. உறவினர்கள் மூதாட்டியை சந்திக்க வரும்போது, உறவினர்களை பார்த்து அந்த மூதாட்டி, அருகே வராதீர்கள், என்னை தொட வேண்டாம், நீங்கள் என்னை தொட்டால் என்னை காயப்படுத்தி விடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதனால், மிகவும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க அந்த மூதாட்டி தங்கியிருந்த அறையில் ரகசிய கேமராவை பொருத்தியுள்ளனர். அப்போதுதான் அந்த விடுதியின் பராமரிப்பாளர் 48 வயதான பிலிப் கேரி மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, வீடியோ ஆதாரங்களுடன் மூதாட்டியின் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். அந்த நபருக்கு குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.