இந்தியில் ரீமேக்காகும் 96 திரைப்படம் - ரசிகர்கள் உற்சாகம்!
'96' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு 9அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் '96' திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்திய சினிமாவின் சிறந்த காதல் படங்களின் பட்டியலில் நீக்க முடியாத இடத்தைப் பிடித்தது. பார்வையாளர்களை கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கும் ஒரு சில படங்களே எப்போதும் கிளாசிக் எவர்க்ரீன் படங்களாக அமையும். அந்த வகையில் 96 படமும் ஒரு கிளாசிக் படமாக அமைந்துவிட்டது.
பார்க்கும் பார்வையாளர்களை அவர்களின் பள்ளி பருவ காலத்திற்கே அழைத்துச் சென்றார் இயக்குனர். படம் வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் படத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை.
96 திரைப்படம் தெலுங்கில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகியது. தற்போது 96 இந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகராக, பார்வையாளர்களைக் கவரும் கதைகளைச் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
அது இன்னும் பல பார்வையாளர்களை அடையும்போது மகிழ்ச்சி மேலும் உயரும். 96' எனக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தது.
தயாரிப்பாளர் அஜய் கபூர் 96 படத்தை இந்திக்கு முன்னெடுத்துச் செல்வது இன்னும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.