9,500 ஆண்டுகள்; நீருக்கடியில் மூழ்கிய நகரம் - நீங்காத மர்மத்தின் பிண்ணனி!
9,500 ஆண்டுகள் பழமையான நகரம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
காம்பாட் வளைகுடா
குஜராத், கடற்கரையில் காம்பாட் (Khambhat) வளைகுடாவில் ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 9,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இந்த நகரம் எப்படி மூழ்கியது என்பது தற்போதுவரை மர்மமாகவே உள்ளது. இந்த பழங்கால கண்டுபிடிப்பு 120 அடி அரேபிய கடலுக்கு அடியில் உள்ளது. இதில் மண் பானைகள், முத்துக்கள் மற்றும் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
விலகாத மர்மம்
இந்த எலும்புகளில் சில, சுமார் 9,500 ஆண்டுகள் பழமையானவை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜியின் முன்னாள் தலைமை புவி விஞ்ஞானியான பத்ரிநாராயண்,
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தைய mother culture-லிருந்து இந்த நகரம் வந்திருக்கலாம். இது கடந்த ice age-க்கு பிறகு மூழ்கியிருக்கலாம். இது முக்கிய வர்த்தக மையமாக இருந்திருக்கும். 9,500 ஆண்டுகள் பழமையான இந்த நகரம் தொடர்பாக,
கம்பாட் வளைகுடாவில் பல தசாப்தங்களாக ஆய்வு செய்த போதிலும், அதை பற்றிய முழுமையான தகவல் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.