விண்வெளிக்குச் செல்லும் 90 வயது நடிகர் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
பிரபல டிவி தொடர் ஸ்டார் டிரெக்கின் நடிகர் வில்லியம் சாட்னர் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான்நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ்,புளூ ஆரிஜின்என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.
இதன்மூலம் பிரபல ஸ்டார் டிரெக் தொடரின் நடிகர் வில்லியம் சாட்னர் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 12 ஆம் தேதி நியூ ஷெப்பர்டு 18 விண்கலம் மூலமாக விண்வெளிக்குச் செல்லும் 4 பேர் கொண்ட குழுவில் ஒருவராக வில்லியம் சாட்னரும் செல்கிறார். இதனிடையே விண்வெளிக்கு பயணம் செல்லும் உலகின் வயதான நபர் என்ற பெருமையை வில்லியம் சாட்னர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.