திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் - அமலாக்கத்துறை அதிரடி
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜெகத்ரட்சகன்
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெகத்ரட்சகன். இவர் ஏற்கனவே மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது.
908 கோடி அபராதம்
சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை ஜெகத்ரட்சகன் வாங்கி உள்ளார். இதன் பின்னர் அந்த பங்குகளை மனைவி,மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார். இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, விளக்கம் கேட்டு ஜெகத்ரடசகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜெகத்ரட்சகனின் ரூ. 89.18 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்வதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.