மாணவர்கள் கணக்கில் ரூ.900 கோடி - தொடரும் வங்கி ஊழியர்களின் அலட்சியம்
வங்கி ஊழியர்களின் அலட்சியம் காரணமாக வேறொருவர் வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பள்ளி சீருடைக்கான அரசு வழங்கும் நிதி உதவித்தொகை வந்து உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ள வங்கிக் கணக்கை பார்த்த இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது,
ஆறாம் வகுப்பு படிக்கும் ஆஷிஷ் என்ற மாணவரின் வங்கிக் கணக்கில் ரூ.6.2 கோடியும், மற்றொரு மாணவரான குருசரண் விஷ்வாஸ் கணக்கில் ரூ.900 கோடியும் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க ஊர் முழுக்க தகவல் பரவியது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் உதயன் மிஸ்ராவங்கியைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது சில தொழில்நுட்பக் கோளாறு களால் அந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் இருப்பதாக தெரிய வந்தது.
அதேசமயம் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் கணக்கிலும் பணம் வந்துள்ளதா என்பதை பார்க்க இன்டர்நெட் மையங்களில் அலைமோதினர் என்பது குறிப்பிடத்தக்கது.