சாதிக்க வயசு தேவையில்லை! 90 வயதில் இளங்கலை பட்டம் பெற்ற மூதாட்டி
அமெரிக்காவைச் சேர்ந்த ஜாய்ஸ் வயோலா டிஃபா என்ற 90 வயது பெண் சாதிக்க வயது தேவையில்லை என்பதற்கேற்ப பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
தகர்ந்து போன ஆசை
ஜாய்ஸ் வயோலா டிஃபா 1951 -ல் வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது கல்லூரி படிப்பைத் தொடங்கினார். பின் மூன்று வருடங்களுக்கு பிறகு தனது படிப்பை விட்டுவிட்டு திருமணம் செய்துகொண்டார்.
ஜாய்ஸ் அவர் முதல் கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்துகொண்டார். இவருக்கு 9 குழந்தைகள் மற்றும் 17 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
இப்படி ஒரு அழகான வாழ்க்கையை ஜாய்ஸ் வாழ்ந்து கொண்டிருந்த பொழுதும் ஒருபக்கம் அவரது கல்லூரி கனவு அவரை துரத்திக் கொண்டிருந்தது.
தள்ளாடும் வயதிலும் விடாத தன்னம்பிக்கை
இதனை அறிந்த அவரது பிள்ளைகள் அவரை ஊக்குவிக்கும் வகையில் கணினி ஒன்றை பரிசாக அளித்தனர். ஜாய்ஸ் இளங்கலை பட்டம் பெறுவதற்காக வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் ஆகஸ்ட் 2019 ல் ஆன்லைனில் விண்ணப்பித்து தனது படிப்பைத் தொடங்கினார்.
விடாமுயற்சியுடன் படித்த இவர் இறுதியில் பட்டம் பெற்று பட்டமளிப்பு விழாவில் மேடையில் நடந்து வளம் வந்து சாதனை புரிந்துள்ளார். கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார் இந்த 90 வயது மூதாட்டி.