வேலூரில் இன்று பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

BJP
By Irumporai Jun 11, 2023 03:38 AM GMT
Report

வேலூரில் இன்று பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பாஜக விளக்க பொதுக்கூட்டம்

பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில், வேலூரில் இன்று பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

அமித்ஷா பங்கேற்பு

இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். மேலும், சென்னை கோவிலம்பாக்கத்தில் நாடாளுமன்ற பொறுப்பாளர்களுடன் சென்னையில் ஆலோசிக்கிறார். பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் வகையில், ஒரு மாதத்திற்குள் 66 பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.

வேலூரில் இன்று பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் | 9 Year Achievement Behalf Of Bjp In Vellore Today

ஒருநாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான அமித்ஷாவுக்கு நேற்று சென்னை விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு நேற்று இரவு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.