கோவையில் ரூ.9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

M K Stalin Coimbatore Government of Tamil Nadu Palanivel Thiagarajan Tamil Nadu Budget 2023
By Thahir Mar 20, 2023 06:06 AM GMT
Report

பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

பட்ஜெட் 2023 அறிவிப்புகள் 

இதில், மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம், காலை உணவு திட்டம் , சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம் என பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் நிதியமைச்சர் அறிவித்து வருகிறார் .

* வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

*  சென்னை அம்பத்துாரில் இளைஞர்களுக்கான நவீன வசதிகளுடன் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

*  மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

*  எண்ணும் எழுத்தும் திட்டம் ரூ.100 கோடியில் 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

*  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள சிப்காட் மேம்படுத்தப்படும்.

*  தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத் தொகை இரு மடங்காக ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு உயர்கல்வித்துறைக்கு ரூ.6957 கோடி நீதி ஒதுக்கீடு.

* 26 தொழில்நுட்பக் கல்லுாரிகள், 55 கலை கல்லுாரிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

* முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

*  கோவை அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

9 thousand crore metro rail project in Coimbatore

*   சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*  மதுரையில் ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

*  போக்குவரத்து துறைக்கு ரூ.8056 கோடி நிதி ஒதுக்கீடு.

*  கிராமங்களில் நீர்நிலைகளை புதுப்பிக்க ரூ.800 கோடி ஒதுக்கீடு.

*  வடசென்னை வளர்ச்சி திட்ட மேம்பாட்டிற்காக ரூ.1,000 கோடி நீதி ஒதுக்கீடு.