9 ஆம் வகுப்பு மாணவிக்கு பிறந்த குழந்தை - சிக்கிய 10 ஆம் வகுப்பு மாணவன்
9 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாகிய 10 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
9ஆம் வகுப்பு சிறுமி
தஞ்சாவூர் அருகே கிராமத்தில் உள்ள பள்ளியில் 13 வயது சிறுமி 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமி வயிறு வீக்கமாக இருந்ததை அவர் பெற்றோர் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து சிறுமி வயிறு வலி என கூறியதால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
சிறுமி கர்ப்பம்
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளனர். இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு அதே மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலிருந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இது தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். விசாரித்ததில் 10 ஆம் வகுப்பு மாணவனை காதலிப்பதாகவும், அவன்தான் குழந்தைக்கு காரணம் என்றும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.