ராமேஸ்வரம் மீனவர்கள் 9 நபர்கள் சிறை பிடிப்பு.. வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு..

Fishing Narendra Modi Rameswaram
By Sakthi Raj Oct 04, 2026 10:58 AM GMT
Report

இலங்கை கடற்படையினால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் அக்டோபர் நான்காம் தேதி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவு தெரிவித்து இருப்பதாவது ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து கடலுக்கு சென்ற த்தியாஸ் (22), மோபிஸ் (21), அபிஸ்டன் (27), ஆண்டனி புரூட்ஸ் (42), எபிஸ்டன் (29), ஸ்டீவன்சன் (22), ஜான் ஜேசன் (24), ஆண்டனி பிரதீப் (26), சுபார்தன் (24) ஆகிய 9 மீனவர்களை இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே மீண்டும் சிறைப்பிடித்து விசைப்படகையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 நபர்கள் சிறை பிடிப்பு.. வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு.. | 9 Rameswaram Fishermen Arrested Issue

இது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பாதுகாப்பை பற்றி எதுவும் வாய் பேசாமல் மத்திய பாஜக அரசும் பிரதமர் மோடியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் வன்மையாக தண்டிக்கத்தக்கது.

சர்வதேச கடல் எல்லை விவகாரத்தை மட்டும் காரணம் காட்டி இலங்கை கடற்படை நடத்தும் இந்தத் தொடர் அராஜகத்தை தடுத்து நிறுத்துவதற்கு மோடி அரசு துணிவின்றி மௌனம் காப்பது எதற்காக?

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 நபர்கள் சிறை பிடிப்பு.. வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு.. | 9 Rameswaram Fishermen Arrested Issue

சிறைபிடிக்கப்பட்டுள்ள சுமார் ஒன்பது ராமேஸ்வரம் மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படத்தையும் உடனடியாக மீட்டு தர மத்திய அரசு தூதரக ரீதியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரவு தீர்வு காண இருநாட்டுப் பேச்சு வார்த்தைகள் நடத்த மோடி அரசு முற்றிலும் தோல்வி அடைந்து இருக்கிறது. இனிமேலும் வெறும் விளம்பரத்திற்காக ஈடுபடுவதை காட்டிலும் நமது மீனவர்களின் பாதுகாப்புக்கு ஒரு நிரந்தர தீர்வை உடனே காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.