விநாயகர் சிலையை கரைக்கும் போது பரிதாபமாக உயிரிழந்த 9 நபர்கள்
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் திங்கட்கிழமை அன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பண்டிகையின் ஒரு முக்கிய பகுதியாக விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கக்கூடிய சடங்குகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் பொழுது ஒரு பகுதியாக நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் ஒடிசாவில் நடைபெற்ற வெவ்வேறு சிலை கரைக்கும் நிகழ்வில் படி மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளித்து உள்ளது.

ஒடிசாவின் கஞ்சம், சுந்தர் கார், பத்ரக், கோர புட் மற்றும் காலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த இறப்புகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒடிசா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக்கான துறையினர் வெளியிட்ட இந்த தகவலின் படி ஜெகத்சிம்பூர் மாவட்டத்தில் எர்சாமா நகரில் இருக்கக்கூடிய கோபால்பூர் பகுதியில் ஓடானலா இந்த இடத்தில் ஆற்றின் மூழ்கிய நான்கு நபர்கள் உடைய சடலங்களை மீட்டு எடுத்து இருக்கிறார்கள்.


மூன்று நபர் காணாமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர பல்வேறு பகுதிகளிலும் பலர் உயிரிழந்த சோகமும் காணாமல் போன செய்தியும் கிடைத்திருக்கிறது. மொத்தம் ஒன்பது பேர் சடலங்கலாகவும், 7 பேர் உயிருடனும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு, மீட்பு பணிகள் இன்னும் தீவிரமாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சம்பவங்களுக்கு ஓடிஸா முதல்வர் மோகன் சரண் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரந்தா ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்புகளை முன்னிட்டு நடந்த இந்த சோகமான செய்தி அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திருக்கிறது.
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள் IBC Tamil