9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - விளையாடி கொண்டிருந்த பிஞ்சு குழந்தைக்கு நடந்த துயரம்!!

baby abused up 9 month
By Anupriyamkumaresan Jul 20, 2021 08:36 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 9 மாத பெண் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - விளையாடி கொண்டிருந்த பிஞ்சு குழந்தைக்கு நடந்த துயரம்!! | 9 Month Baby Affected By Abuse Treatment

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாரின் குர்ஜா தேஹாத் பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது . அதே பகுதியில் உள்ள ஒரு வாலிபர், அந்த குழந்தையை விளையாடும் சாக்கில் தனது வீட்டிற்கு தூக்கி சென்றுள்ளார்.

வீட்டிற்கு தூக்கி சென்ற அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு அந்த குழந்தையை தூக்கிய இடத்திலேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார்.

9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - விளையாடி கொண்டிருந்த பிஞ்சு குழந்தைக்கு நடந்த துயரம்!! | 9 Month Baby Affected By Abuse Treatment

குழந்தையின் அழுகுரல் கேட்ட பெற்றோர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் தலைமறைவாகிய வாலிபர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.