தமிழகத்தில் உள்ள சிங்கங்களையும் விட்டுவைக்காத கொரோனா
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா 2 ஆம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது. அங்குள்ள விலங்குகளை பராமரிக்க பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மீனா என்ற 9 வயது பெண்சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 11 சிங்கங்களுக்கு பசியின்மை, சளி தொந்தரவு இருந்ததால் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்