சென்னை அருகே நகைக்கடையில் 9 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை
சென்னை அருகே பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் செயல்படும் நகைக்கடையில் 9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 தங்கம், வைர நகைகள் கொள்ளை
ஸ்ரீதர் என்பவர் சென்னை பெரம்பூரில் ஜேஎல் கோல்டு பேலஸ் என்ற நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இதையறிந்து கடைக்கு சென்ற கொள்ளையர்கள் கடையின் முன்பக்க ஷட்டரை வெல்டிங் மெஷினால் வெட்டி உள்ளே புகுந்தனர்.
இதையடுத்து அங்கு இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து கடையின் உரிமையாளர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகை கடையில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்கை கொள்ளையர்கள் துாக்கி சென்றுள்ளனர்.
வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.