9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - பொதுமக்கள் கலக்கம்

warn 9 districts orange alert
By Anupriyamkumaresan Oct 31, 2021 07:57 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது.

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - பொதுமக்கள் கலக்கம் | 9 District In Tamilnadu Orange Alert Warn

இதனால், இன்று முதல் 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், குமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 3,4 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடியில் மிக கனமழையும் ஏனைய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.