9 நாட்கள்...9 விதமான உடைகள் - சர்ச்சையை கிளப்பிய பிரபல வங்கியின் அறிவிப்பு

unionbankofindia Navratricelebration
By Petchi Avudaiappan Oct 09, 2021 04:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களும் ஒன்பது நிற ஆடை அணிந்து வரவேண்டும் என்று யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்களுக்கு அந்த வங்கியின் பொது மேலாளர் ஏ .ஆர். ராகவேந்திரா சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

9 நாட்கள்...9 விதமான உடைகள் - சர்ச்சையை கிளப்பிய பிரபல வங்கியின் அறிவிப்பு | 9 Color Dresses In 9 Days Of Navratri Issue

இந்தியா முழுவதும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தொடங்கும் அக்டோபர் 7ஆம் தேதிமஞ்சள் , 8 ஆம் தேதி பச்சை, 9 ஆம் தேதி கிரே, 10 ஆம் தேதி ஆரஞ்சு, 11 ஆம் தேதி வெள்ளை, 12 ஆம் தேதி சிகப்பு, 13 ஆம் தேதி ராயல் புளூ, 14 ஆம் தேதி பிங்க், 15 ஆம் தேதி பர்பிள் நிற ஆடை அணிந்து வர வேண்டும் என யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்களுக்கு அந்த வங்கியின் பொது மேலாளர் ஏ .ஆர். ராகவேந்திரா உத்தரவிட்டிருக்கிறார். 

அவ்வாறு குறிப்பிட்ட ஆடையை அணிந்து வராத நபர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்? யார் இவருக்கு அதிகாரம் தந்தது. அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல், உடனடியாக உத்தரவை திரும்பப்பெறுக” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கரூர் எம்பி ஜோதிமணி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். யூனியன்பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் 9 நாட்களும் 9 நிற ஆடைகளை அணிந்து வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். என்ன உடை என்பதை சொல்ல மறந்துவிட்டார் போல! இது போன்ற அத்துமீறல்களை, அராஜகங்களை மோடி அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இது கடுமையான கண்டனத்துக்குரியது. உடனடியாக உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.