அகழாய்வு பணிகளை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
கீழடியில் 8ம் கட்ட ஆய்வு பணியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் இதுவரை 7 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
இந்த அகழாய்வில் முதுமக்கள் பயன்படுத்திய பாசிமணிகள் ,தாழிகள், அணிகலன்கள், தாயக்கட்டை உள்ளிட்ட பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இவற்றை மக்கள் பார்வையிடும் வகையில் கீழடி அகழாய்வு வைப்பகம் கட்டும் பணியும் கொந்தகையில் நடந்து வருகிறது.
இதுவரை 7 கட்டமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,8ம் கட்ட ஆய்வு பணி பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் நடைபெறும் என தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில் கீழடி எட்டாம் கட்ட ஆய்வு பணியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகளையும், கங்கை கொண்ட சோழபுரம் ,மாளிகையில் இரண்டாம் கட்ட ஆய்வு பணிகளையும் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.