88 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் - அதிர்ச்சி சம்பவம்!

chennai abuse old lady
By Anupriyamkumaresan Jul 24, 2021 09:20 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த முதியவர் பாலசுந்தரத்திற்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தால் அவர் அடிக்கடி போதையில் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

88 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் - அதிர்ச்சி சம்பவம்! | 88 Year Old Lady Abuse In Chennai

இந்த நிலையில் அதே பகுதியில் 88 வயது மூதாட்டி ஒருவர், தனியாக வசித்து வருகிறார். இதனை அறிந்த அந்த போதை ஆசாமி, ஒரு நாள் மதுபோதையில் மூதாட்டி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கத்தி அலறிய மூதாட்டியின் குரல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் முதியவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

88 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் - அதிர்ச்சி சம்பவம்! | 88 Year Old Lady Abuse In Chennai

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.