87 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது இளைஞன் - கொடூரச் சம்பவம்
டெல்லியில் படுத்த படுக்கையாக இருந்த 87 வயது மூதாட்டியிடம் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, திலக் நகரைச் சேர்ந்த 87 வயது மூதாட்டி பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். இந்த மூதாட்டியை 65 வயதாகும் அவரது பெண் தான் பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி மூதாட்டியின் மகள் வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட 30 வயதுமிக்க ஒரு இளைஞர் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். வீட்டிற்குள் சத்தம் கேட்டதும் மூதாட்டி யார் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இளைஞன் கேஸ் சர்வீஸ் செய்ய வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். ஆனால், இளைஞனின் செயல்கள் மூதாட்டிக்கு சந்தேகத்தை கொடுத்தது. உடனே, சுதாரித்துக்கொண்ட மூதாட்டி கத்தி கூச்சலிட ஆரம்பித்தார்.
அப்போது, அந்த இளைஞன் மூதாட்டியிடம் கடுமையாக நடந்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பிறகு, வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டான். வெளியே சென்ற மகள் வீட்டிற்குள் வந்தாள்.
அப்போது, தாயை பார்த்தபோது படுகாயமுற்று கிடந்ததை கண்டு அதிர்ந்து அடைந்தார். என்ன நடந்தது என்று கேட்டபோது, அழுதுகொண்டே தாய் நடந்ததை கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மகள் உடனே டெல்லி மேற்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் அந்த இளைஞனை தேடினர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் துப்புரவு தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியை இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
