சிறுமிக்கு பாலியல் தொல்லை : 86 வயது முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் 86 வயதான முதியவர் குப்புசாமி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆனந்த் இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளி குப்புசாமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan