குடும்பத்தை பறிகொடுத்த 85 வயது மூதாட்டி; 1000 கிமீ சைக்கிள் ஓட்டி சாதனை - எதற்காக தெரியுமா?
ஸ்காட்லாந்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் 1000கிமீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
85 வயது மூதாட்டி
ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் 85 வயது மூதாட்டியான மாவிஸ் பேட்டர்சன். இவர் “பாட்டி மாவே” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். கடந்த 1996ம் ஆண்டு மாவேவின் கணவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2012, 2013ம் ஆண்டில் அவரின் மகன் மற்றும் மகளும் உயிரிழந்துள்ளனர். இப்படி அடுக்கடுக்கான துயரம் வரத் தொடங்கி சோகம் தீர்வதற்குள் அவரது இன்னொரு மகனும் விபத்தில் சிக்கி பலியானார்.
இந்த துயரங்களிலிருந்து மீள வேண்டும் என்று நினைத்த மாவே சைக்கிள் ஓட்டத் தொடங்கியுள்ளார். இதற்காக தினமும் கலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு, வானிலை பற்றியெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ஊர்சுற்ற தொடங்கியுள்ளார்.
சைக்கிள் ஓட்டி சாதனை
தினமும் 80 கிமீ தூரம் வரை சைக்கிளில் பயணம் செய்துள்ளார் மாவே. இந்நிலையில் அவர் சமீபத்தில் புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஸ்காட்லாந்து முழுதும் சைக்கிளில் 1000 கி.மீ பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
இப்படி பல வருடங்கள் தொடர்ந்து சைக்கிள் ஓட்டியதால், முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மாவேவிடம் மருத்துவர்கள் அறிவுத்தியுள்ளனர். ஆனால் அவர் சைக்கிள் ஓட்டுவதை விடவில்லை. நீண்ட தூர சாதனை பயணத்தையும் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
இந்த சாதனையின் மூலம் 960கி.மீ தூரத்தை முழுதும் நிறைவு செய்த வயதான பெண் என்ற சாதனை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பித்துள்ளார் மாவே. இவரின் இந்த பயணம் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.