46 வயது வித்தியாசம்... 83 வயது மூதாட்டியை காதலித்து திருமணம் செய்த நபர்!

Married Egypt England Divorce
By Vinothini Jul 25, 2023 09:51 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

தன்னைவிட 46 வயது மூத்தவரை ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.

காதல் திருமணம்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஐரிஸ் ஜோன்ஸ் என்ற பெண், இவருக்கு 83 வயது. இவர் 2019-ல் எகிப்து நாட்டை சேர்ந்த இப்ராஹிம் என்ற 37 வயது நபருடன் பேஸ்புக் மூலம் பழகினார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் அந்த பெண் எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு வந்தார்.

83-years-old-lady-married-younger-man

அவர் அங்கு இப்ராஹிமை சந்தித்தார். இருவரும் ஒருவரையொருவர் விரும்பி ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டனர். எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக் நகரில் இவர்களது தேனிலவு கொண்டாடினர். இவர்களது திருமணத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தபோது இவர்களின் காதல் விவகாரம் வைரலானது.

விவாகரத்து

இந்நிலையில், இவர்கள் இருவரின் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் சுமூகமாக சென்றது. ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். இதனை அந்த பெண் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

83-years-old-lady-married-younger-man

அதில், இப்ராஹிமை விரும்புவதாகவும் ஆனால், தங்கள் உறவு சில காலமாக கடினமாகி வருவதாகவும், காதலித்தாலும் ஏதோ ஒரு விஷயத்துக்காக சண்டை போட்டுக் கொள்வதாகவும், இத்துடன், பிரிவதே நல்லது என நினைத்து விவாகரத்து செய்து விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த வலியில் இருந்து மீள்வதற்காக தான் ஒரு பூனையை வளர்த்து வருவதாகவும், 1993-ம் ஆண்டு தனது முதல் கணவரை விவாகரத்து செய்ததாகவும், 26 ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை என்று கூறி இணையத்தில் தனது வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார்.