சென்னைக்கு கூடுதலாக 82 ஆயிரம் டோஸ் கோவாக்சீன்!

chennai covaxin
By Irumporai May 26, 2021 04:57 PM GMT
Report

சென்னைக்கு மேலும் 82 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் ஹைதராபாத்திலிருந்து வந்துள்ளன

இன்று காலை ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 16 பாா்சல்களில் 426 கிலோ கோவாக்சீன் தடுப்பூசி மருந்துகள் வந்தன.

அவை விமானத்திலிருந்து இறக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசிகள் சென்னையில் உள்ள 2 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ துறைக்கும் வந்துள்ளதாக கூறப்பட்டது.