நடுவானில் பாராசூட்டில் பறந்த 80 வயது பாட்டி... - வைரலாகும் வீடியோ...!
80 வயது பாட்டி ஒருவர் மன தைரியத்தோடு பாராசூட்டில் நடுவானில் பறந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடுவானில் பாராசூட்டில் பறந்த 80 வயது பாட்டி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், செலினா மோசஸ் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்,
"வயது ஒரு எண் மட்டுமே... என் பாட்டி 80 வயதில் இதைச் செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வீடியோவை எனது கேலரியில் கண்டுபிடித்தேன். என்னால் முடியவில்லை. நான் பகிர்ந்து விட்டேன். என் பாட்டி என்னை விட்டுப் பிரிந்து 7 வருடங்கள் ஆகின்றன. ஆனால், அவள் நம்மில் விட்டுச் சென்றது என்றென்றும் நினைவில் இருக்கும். ஐ மிஸ் யூ. லவ் யூ. என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பாட்டியின், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். மோசஸ் வெளியிட்ட இந்த வீடியோ இதுவரை 4 மில்லியன் லைக்குகளை நெருங்கி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.