நிர்வாண நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு சிறுமி கொலை - போலீசார் விசாரணை!

Rajasthan
By Swetha Subash Jun 05, 2022 06:59 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று காணாமல் போன சிறுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள அமர் என்ற பகுதியில் கடந்த சனிக்கைழமையன்று எட்டு வயது மதிக்கத்தக்க சிறுமி திடீரென கானாமல் போனார்.

சிறுமி கொலை

இதனை தொடர்ந்து சிறுமியை அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது சிறுமி, வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நிர்வாணமான கோலத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இடத்தை ஆய்வு செய்துவிட்டு சிறுமி மர்மமான முறையில் தொண்டை அறுப்பட்டு இறந்திருப்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிர்வாண நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு சிறுமி கொலை - போலீசார் விசாரணை! | 8 Yo Missing Girl In Rajasthan Found Dead

பாஜக வலியுறுத்தல்

இந்நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்ட வழ்க்கில் குற்றவாளிகளை போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய்ய வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அக்கட்சியின் தலைவர் சதிஷ் பூனியா தலைமையில் அமர் காவல் நிலையத்தின் எதிரே தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

நிர்வாண நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு சிறுமி கொலை - போலீசார் விசாரணை! | 8 Yo Missing Girl In Rajasthan Found Dead

இது குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதிஷ் பூனியா, இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக போலீசார் முறையான விசாரனை நடத்தவில்லை என்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தபடும் என எச்சரித்தார்.