இந்த 8 வருடத்தில் நான் பிரதமராவே இல்லை : பிரதமர் மோடி நெகிழ்ச்சி

Narendra Modi
By Irumporai May 31, 2022 08:23 AM GMT
Report

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் (மே 30) 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனை முன்னிட்டு நேற்று முதல் வருகிற ஜூன் 14ந்தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்த அக்கட்சி திட்டமிட்டு வருகிறது

இந்த நிலையில் பிரதமர் மோடி இமாசல பிரதேசம் சென்றுள்ளார் அங்கு சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்திற்கு பொதுமக்களுக்கு உரையாற்றினார். அங்கு கூடியிருந்த மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி :

கடந்த 8 ஆண்டுகளில்,ஒரு முறை கூட என்னை நான் பிரதமராக பார்த்தது இல்லை. ஆவணங்களில் கையெழுத்திடும்போது மட்டுமே, அதற்குரிய பொறுப்பு உள்ளதற்காக நான் பிரதமராக இருக்கிறேன். கோப்புகள் கையெழுத்திடப்பட்டு சென்ற பின், நான் பிரதமர் இல்லை.

130 கோடி மக்களின் முதன்மை சேவை செய்பவராக மட்டுமே நான் இருக்கிறேன். என்னுடைய வாழ்வின் எல்லாமும் ஆக இருப்பவர்கள் நீங்களே. என்னுடைய வாழ்வும் கூட உங்களுக்காகவே என பிரதமர் மோடி பேசினார்.