8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர் - போக்சோ சட்டத்தின் கீழ் கைது
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, குண்ணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (62). இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து ஓய்வி பெற்றவர்.
இந்நிலையில், சண்முகசுந்தரம் 3ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அச்சிறுமி அழுதுக்கொண்டே பெற்றோரிடம் சென்று கூறியுள்ளாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சண்முகசுந்தரத்திடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றத்தை சண்முகசுந்தரம் ஒப்புக்கொண்டதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.