8 வயது சிறுமியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட, ஊர் ஊராக சுற்றிய இளைஞன் - நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
ஒரிசா மாநிலத்தில், 8 வயது சிறுமியின் தலையை வெட்டி ஊர் முழுக்க சுற்றி வந்த இளைஞனால் பெரும் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலம், சம்பல்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமி காலைக்கடன் கழிப்பதற்காக நேற்று வயல் பகுதிக்கு சென்றிருக்கிறாள். அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோடாரியை எடுத்துக்கொண்டு அந்த சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளான்.
வயலுக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சிறுமியை தேடியுள்ளனர்.
அப்போது, திடீரென்று அச்சிறுமியின் தலையை மட்டும் கையில் ஏந்திய படி ஊர், ஊராக சுற்றியுள்ளான்.
அந்த சிறுமியின் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்ததால், அந்த தலையை அங்குள்ள குழாயில் நன்றாக கழுவி சுத்தம் செய்துள்ளான். இவனைப் பார்த்து கிராம பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது, அந்த நபரின் மனைவி ஓடி வந்து அவனிடம் என்ன இது என்று கேட்டு அலறினாள். அப்போது, தன் மனைவியை அவன் கடுமையாக திட்டி மிரட்டினான். பின்னர், அந்த சிறுமியின் தலையை தன் பக்கத்தில் வைத்து கீழே படுத்துக் கொண்டான்.
இதைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் அலறி துடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கையும், களவுமாக பிடித்தனர்.
இதனையடுத்து, அந்த நபரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த நபர் மது அருந்தும் பழக்கம் கிடையாது என்பது தெரியவந்தது. மேலும், அந்த நபருக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எதற்காக அச்சிறுமியை கொடூரமாக கொலை செய்து தலையை மட்டும் வெட்டி, ஊர் ஊராக எடுத்துக் கொண்டு சுற்றினான் என்பது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
