செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி : நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்
கேரள மாநிலம் திருச்சூரில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கேரளமாநிலம்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் செல்போன் வெடித்து சிதறியதில் ஆதித்ஸ்ரீ என்ற 8 வயது சிறுமி உயிரிழந்தார். திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த சிறுமி, வீடியோ பார்த்து கொண்டிருந்த போது செல்போன் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ பார்த்து கொண்டிருந்தபோதே சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி பலி
செல்போன் வெடித்து சிறுமி உயிரிழந்தது குறித்து பழயன்ணுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட போலீஸ் வீட்டில் சீல் வைத்ததாகவும், செல்போன் வெடித்து உயிரிழந்த சிறுமியின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் பரிசோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.