8 வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சலவைத் தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி
கரூர், சின்ன ஆண்டான்கோவில் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி நாகமணி. இத்தம்பதிக்கு 8 வயதில் மகன் உள்ளான்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ஒரு சலவைத் தொழிலாளி. சண்முகம் அந்த 8 வயது சிறுவனுடன் அடிக்கடி பழகி வந்துள்ளார். பெற்றோர்களும் இதை கண்டுக்கவில்லை.
கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி அன்று சிறுவனுக்கு சாக்லெட், பிஸ்கட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி சண்முகம் அழைத்துச் சென்றுள்ளான்.
அப்போது, சலவை செய்யும் அறைக்குள் சிறுவனை அழைத்துச் சென்று சண்முகவேல் சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான். சிறுவன் அழுதுக்கொண்டே பெற்றோரிடம் நடந்ததை கூறினான்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை பதிவு செய்த போலீசார், சண்முகவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில் கூறியிருப்பதாவது -
சிறுவனை ஏமாற்றி கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தொகை 1,000 ரூபாயை கட்ட தவறினால், மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.
போக்சோ சட்டத்தின் பிரிவின்படி சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததால், 20 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
1000 ரூபாய் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.
மேலும, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி நசீமா பானு பரிந்துரைத்திருக்கிறார்.