சாக்லேட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் மரணம்..! - அதிர்ச்சி சம்பவம்..!

Telangana Death
By Nandhini 2 மாதங்கள் முன்

தெலுங்கானா மாநிலத்தில் தந்தை கொண்டு வந்த சாக்லேட் சாப்பிட்டு 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாக்லேட் சாப்பிட்டு 8 வயது சிறுவன் மரணம்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கன் சிங் என்பவர், தெலுங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் குடிபெயர்ந்து தனது குடும்பம் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இதனையடுத்து, அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று கடந்த வாரம் திரும்பினார். ​​கங்கர் சிங் வெளிநாட்டிலிருந்து தனது குழந்தைகளுக்காக ஆசையாக சாக்லேட் கொண்டு வந்திருந்தார்.

கங்கர் சிங்கின் 8 வயது மகன் சந்தீப் கடந்த சனிக்கிழமை தனது பள்ளிக்கு சில சாக்லேட்டுகளை எடுத்துச் சென்றார். பள்ளியில் சாக்லேட்டை சந்தீப் சாப்பிட்டபோது, அது தொண்டையில் சிக்கியது.

இதனையடுத்து சந்தீப் வகுப்பில் சரிந்து மூச்சுத் திணறினார். இதைப் பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்த போது சந்தீப் மூச்சு திணறி உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாக்லேட் சாப்பிட்டு 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

8-year-old-boy-chocolate-death-telangana