8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காதல் திருமணம் - அரங்கேறிய ஆணவ கொலை
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த வாலிபரை சரமாரியாக குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் தொண்டமாநத்தம் மாங்குளத்தை சேர்ந்த கண்ணன், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவையை சேர்ந்த பிரபாவதி என்பவரை கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர்கள் வீட்டில் ஏற்காத நிலையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தற்போது 7 வயதிலும், 5 வயதிலும் இரு மகன்கள் உள்ளனர்.
இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இவரது வீட்டார் பெரும் ஆத்திரத்திலேயே இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கண்ணன் வசித்து வந்த தொண்டமாநத்தம் பகுதியில் சாரதி என்பவர், தனது நிலத்தினை கண்ணனுக்கு 6 லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார்.
ஆனாலும் நிலத்தை கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து கண்ணன் தனியாக இருந்த நேரம் பார்த்து, சாரதி அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு சாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.