தொடர் பதற்றம்..தெலுங்கானா சுரங்க விபத்து - சிக்கியுள்ள 8 பேரின் நிலை என்ன?
சுரங்க விபத்தில் தொழிலாளர்கள் 8 பேர் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கானா
தெலுங்கானாவின் நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்தச் சம்பவத்தின்போது சுரங்கப்பாதையினுள் வேலையில் ஈடுபட்டிருந்தவர்களில் 8 பேர் தற்போது உள்ளே சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில், 4 பேர் ஜார்கண்ட், 2 பேர் உத்தரப்பிரதேசம், ஒருவர் ஜம்மு காஷ்மீர், ஒருவர் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மேலும், பேர் தி ராபின்ஸ எனும் அமெரிக்கச் சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியப் பொறியாளர்கள் 2 பேர் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சுரங்க விபத்தில் சிக்கிய பலரும் மீட்கப்பட்ட நிலையில்,தெலங்கானாவில் சுரங்க விபத்தில் 8 தொழிலாளர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுரங்க விபத்து
இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு உத்தரகண்ட்டில் சுரங்கப்பாதையில் விபத்து ஏற்பட்டபோது அதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்ட குழுவினர் மற்றும் நிபுணர்களை தெலங்கானா அரசு அணுகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.