ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் 8 பேர் மாயம் - அதிர்ச்சியில் உறவினர்கள்..!

Tamil nadu Government of Tamil Nadu Odisha Odisha Train Accident
By Thahir Jun 04, 2023 09:12 AM GMT
Report

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை அவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் மாநில அவசர கால கட்டுப்பாடு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரயில் விபத்தில் 8 பேர் மாயம்?

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது.

மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

8 Tamils ​​missing in Odisha train accident

இந்நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள கீழ்கண்ட 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

அவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் கிழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்.

  • 04428593990
  • 9445869843

8 பேரின் பெயர் மற்றும் வயது 

8 Tamils ​​missing in Odisha train accident