சென்னையை சேர்ந்த 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு : வெளியான அதிர்ச்சி தகவல்

Chennai ISIS
By Irumporai Nov 10, 2022 08:50 AM GMT
Report

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.

கோவை குண்டு வெடிப்பு சம்பவம்

இந்த சம்பவம் குறித்த விசாரணையினை என்,ஐ,ஏ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை கார் வெடிகுண்டு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவத்துடன் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு : வெளியான அதிர்ச்சி தகவல் | 8 Persons Of Chennai Connect In Isis

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு 

தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய 18 பேரின் இருக்கும் ஐந்து இடங்களில் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது