தீபாவளி நாளில் தமிழகத்தை உலுக்கிய 8 கொலைகள்.., 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி

Diwali
By Yashini Nov 09, 2026 06:24 AM GMT
Report

8 People Killed in Tamil Nadu on Diwali- தமிழ்நாட்டில் தீபாவளி நாளான நேற்று ஒரே நாளில் 8 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 2 சிறுவர்கள், ஒரு இளம் பெண், 3 ரவுடிகள் உள்பட 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

2 சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி

திருச்சி- திருச்சி சமயபுரத்தில் கூலி வேலை செய்து வந்த 17 வயதுடைய ராகுல், விஷால் ஆகிய இருவரும் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

மேலும், திருச்சி புறத்தாக்குடியில் கிறிஸ்டோபர் என்ற ஐடி ஊழியரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூர்-  கடலூர் பெரிய கட்டுப்பாளையத்தில் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ரவுடி பிரிதிவிராஜ் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அருளரசு, அவரது தம்பி அன்பரசன் ஆகியோரை காவல்துறையினர் தேடினர். இதில் அருளரசை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

தீபாவளி நாளில் தமிழகத்தை உலுக்கிய 8 கொலைகள்.., 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி | 8 People Killed In Tamil Nadu On Diwali

சிவகங்கை-  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரவுடி விக்னேஷ் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர்.

மேலும், கல்லல் அருகே ரவுடி நவீன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தேனி-  தேனி சமதர்மபுரம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களை அவர் தட்டிக் கேட்டதனால் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர்-  திருவள்ளூர் மாவட்டம் சென்றான்பாளையம் அருகே ஆந்திராவை சேர்ந்த மேகலா (24) என்ற இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக பிரசாத் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.