தீபாவளி நாளில் தமிழகத்தை உலுக்கிய 8 கொலைகள்.., 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி
8 People Killed in Tamil Nadu on Diwali- தமிழ்நாட்டில் தீபாவளி நாளான நேற்று ஒரே நாளில் 8 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 2 சிறுவர்கள், ஒரு இளம் பெண், 3 ரவுடிகள் உள்பட 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2 சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி
திருச்சி- திருச்சி சமயபுரத்தில் கூலி வேலை செய்து வந்த 17 வயதுடைய ராகுல், விஷால் ஆகிய இருவரும் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
மேலும், திருச்சி புறத்தாக்குடியில் கிறிஸ்டோபர் என்ற ஐடி ஊழியரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர்- கடலூர் பெரிய கட்டுப்பாளையத்தில் நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ரவுடி பிரிதிவிராஜ் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அருளரசு, அவரது தம்பி அன்பரசன் ஆகியோரை காவல்துறையினர் தேடினர். இதில் அருளரசை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

சிவகங்கை- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரவுடி விக்னேஷ் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர்.
மேலும், கல்லல் அருகே ரவுடி நவீன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தேனி- தேனி சமதர்மபுரம் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்களை அவர் தட்டிக் கேட்டதனால் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர்- திருவள்ளூர் மாவட்டம் சென்றான்பாளையம் அருகே ஆந்திராவை சேர்ந்த மேகலா (24) என்ற இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக பிரசாத் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.