மக்களே உஷார்..! மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..? தமிழகத்தில் 48 பேருக்கு தொற்று உறுதி!
தமிழகத்தில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து தற்போதுதான் உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த பெருந்தொற்றின் தாக்கம் கடந்த சில ஆண்டுகள் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் பாதிப்பு வேகமெடுத்து வருகிறது.
தமிழகத்தில் பாதிப்பு
கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்தது. அதன்படி இதுவரை தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் இன்று 16 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும் தொற்றானது கண்டறியப்பட்டுள்ளது.