இலங்கையில் அமைச்சராகும் தமிழர் : 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

By Irumporai May 23, 2022 07:17 AM GMT
Report

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதாரம் நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இருந்தார்.

இலங்கையில் அமைச்சராகும் தமிழர் :  8 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு | 8 New Ministers Take Office In Sri Lanka

இந்த நிலையில், ஏற்க்கனவே, இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் புதிதாக 13 அமைச்சர்கள் பதவியேற்றதையடுத்து, இன்று இலங்கையில் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  

புதிய பிரதமராக ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அங்கு அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் ரத்து செய்யப்படும் என கூறியது குறிபிடத்தக்கது 

அதன்படி பதவியேற்ற பதவியேற்றவர்களின் விவரம்:

டக்ளஸ் தேவானந்தா- கடற்றொழில், பந்துல குணவர்தன- வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை, கெஹேலிய ரம்புக்வெல்ல- நீர் வழங்கல், மஹிந்த அமரவீர- விவசாயம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு, ரமேஷ் பத்திரன- கைத்தொழில், விதுர விக்ரமநாயக்க- புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரம், அஹமட் நசீர்- சுற்றாடல், ரொஷான் ரணசிங்க- நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகாரம்,அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.