8 புதிய மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை - முதலமைச்சர் முடிவெடுப்பார்...அமைச்சர் பதில்..!
நிதிநிலைக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
8 புதிய மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை
தமிழகத்தில் மேலும் 8 புதிய மாவட்டங்கள் உருவாக்க ஆலோசித்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க சேவூர் ராமச்சந்திரன் கோரியதற்கு அமைச்சர் பதில் அளித்தார்.
8 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிதிநிலைக்கேற்ப முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
முதலமைச்சர் முடிவெடுப்பார்
பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலை பிரித்து ஆரணி மாவட்ட அமைக்க சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.
கோவில்பட்டி, பழனி, பொள்ளாச்சி, ஆரணி, கும்பகோணம் ஆகியவற்றை தனி மாவட்டங்களாக அறிவிக்க சேவூர் ராமச்சந்திரன், கோவி.செழியன் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.
8 மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கை பரிசீலினையில் உள்ளது, நிதிநிலைக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.