அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் - அமெரிக்க துாதரகம் அறிவிப்பு..!

Visa Announce Provide AmericaEmbassy 8Lakh
By Thahir Apr 20, 2022 02:00 AM GMT
Report

இந்த ஆண்டு அமெரிக்கா செல்ல விரும்பும் 8 லட்சம் பேருக்கு விசாக்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க துாதரகம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் டொனால்டு ஹெஃப்லின் அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்திற்கு முன்பு 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், ஐ.டி. கம்பெனிகள் மூலம் அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விசா நேர்காணலுக்கான தேதி ஒதுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் மாணவர்களுக்கு மே 2-வது வாரத்தில் விசா நேர்காணலுக்கான தேதி ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தூதரக சேவைகளுக்கான தலைவர் கேத்தரின் உடன் இருந்தார்.